Tower Hall Theatre Foundation

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

X மூடு
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மை பற்றி மீள்பார்வை

மீள்பார்வை

எமது பணி

இலங்கையில் கலாசார செல்வவளம் மற்றும் பல்வகைத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு டவர்ஹோல் நாடக மன்றம் சமகால கலை நாடகங்களை விருத்தி செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளதுடன், கீழ் குறிப்பிடப்படும் பொறுப்புகளையும் மேற்கொள்கின்றது.

  • தேசிய சம்பிரதாய நாடக கலையை மேம்படுத்தல்
  • பழைய காலத்து கலைஞர்கள் மற்றும் அவர்களில் தங்கிவாழ்பவர்களின் பொருட்டு நலனோம்பல் பணிகளை மேற்கொள்ளுதல்.
  • சம்பிரதாய நாடக பாத்திரங்கள் தொடர்பாக மக்களை அறிவுறுத்தல்.
  • பொழுதுபோக்கை பெற்றுத் தரும் கலாசார பின்னணியை வழங்கி மக்களின் வாழ்க்கைத்தரத்தில் பண்புசார் தன்மையை மேம்படுத்தல்
  • நாட்டில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் ஒற்றுமையை விருத்தி செய்து இலங்கையை வரலாற்று கலாசார தொகுப்புகளின் கலைகூடமாக்குதல்.
  • கலை நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் இணைந்துள்ள நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் அதனுடன் தொடர்புள்ள சேவைகளையும் மேற்கொள்ளுதல் ஆகியன டவர்ஹொல் மன்றத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதுன் அது கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ளது.

அறிமுகம்

டவர்ஹோல் நாடக மன்றம் 1978 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க டவர் ஹோல் நாடக மன்றச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டதாகும். இம் மன்றத்தின் பிரதான அலுவலகம் கொழும்பு 07, விஜேராம மாவத்தை, சவ்சிரிபாயாவில் அமைந்துள்ளது.

இம் மன்றத்தின் பிரதான நோக்கங்கள்

  • தேசிய நாடக நடவடிக்கைகளை மேம்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல்.
  • நாடகத்தின் உபயோகம் தொடர்பான அறிவு, புரிந்துணர்வு ஆகிய விடயங்களை விருத்திச்செய்து பிரசாரப்படுத்தல்.
  • நாடக கலைஞர்களுக்கும் கைவினைஞர்களுக்கும் நிதி உதவிகளை வழங்குதல் மற்றும் அவர்களை பயிற்றுவிப்பதற்கு உதவிசெய்தல்.
  • சங்கீத நாடகங்கள், நர்த்தன நாடகங்கள், இசை நாடகங்கள் ஆகியவற்றை பரீட்சித்துப்பார்த்தல் மற்றும் மேடையேற்றுதல்.

மேற்படி நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக டவர்ஹோல் நாடக மன்றத்தை தேசிய நினைவுச்சின்னமாக மறுசீரமைத்து பாதுகாத்தல் மற்றும் அதனை பேணிச்செல்லுதல் உள்ளிட்ட டவர்ஹோல் நாடக மன்றத்தின் பொறுப்பாளர் சபை பொருத்தமானதென தீர்மானிக்கும் ஏனைய நோக்கங்களிலும் ஈடுபடுதல்.

ஏனைய நோக்கங்கள்

1978 ஆம் ஆண்டு டவர்ஹோல் மன்றச்சட்டம் மூலம் விதிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்கு மேலதிகமாக விடயத்திற்கு பொறுப்பான கெளரவ அமைச்சரின் அனுமதியுடன் பணிப்பாளர் நாயகத்தின் தலைமைத்துவத்தில் கீழ் குறிப்பிடப்படும் பணிகளும் நிறைவேற்றப்படுகின்றன.

  • தேசிய நாடக நடவடிக்கைகளை மேம்படுத்தல் மற்றும் பிரசாரப்படுத்தல், பிரசித்திபெற்ற, பிரசித்திப்பெறாத  நூர்த்திப்பாடல்களை பாதுகாத்தல், நாடகங்களின் நடிப்புப் பாத்திரங்களின் தரத்தை மேம்படுத்தல்.
  • தரத்துடன் கூடிய நாடகங்களை தயாரித்தல் அத்துடன் குறித்த நாடகங்களை நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் நடித்து காட்டுதலின் ஊடாக கிடைக்கப்பெறும் நிதிகளைக் கொண்டு தேர்ச்சி பெற்ற கலைஞர்களுக்கு நிதி உதவிகளை வழங்குதல்.
  • கலை பணிகளில் ஈடுபடும் சம்பிரதாய மற்றும் சமகால கலைஞர்களுக்கு தேர்ச்சிபெற்ற வைத்தியர்களைக் கொண்டு பரிசோதனை செய்து தேவையான மருத்துவ சிகிச்சைகளை மன்றத்தின் செலவில் வழங்குதல்.
  • வளர்ந்து வரும் ஆற்றல்களைக் கொண்டுள்ள கலைஞர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களைக் கொண்டு முறையான பயிற்சி வழங்குதல்
  • நாடகம் மற்றும் சங்கீதம் கற்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை வழங்குதல்.
LAST_UPDATED2  
டவர்ஹோல் மண்டபம்
எலிபின்ஸ்டன் மண்டபம்
ருக்மணிதேவி மண்டபம்
நாடக பாடசாலை
ஒலிகூடம்
பஸ்வண்டி சேவைகள்
டவர்ஹோல் வெளியீடுகள்
பாட்கண்டே

மேலே