Tower Hall Theatre Foundation

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

X மூடு
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மை பற்றி வரலாறு

வரலாறு

1880 ஆம் ஆண்டுகளில் கொழும்பு நகரம் முழுவதும் சின்க் தகடுகளால் வேயப்பட்ட தற்காலிக குடாரங்கள் நாடகங்களை மேடையேற்றும் நோக்கத்துடன் நிர்மாணிக்கப்பட்டன. அன்று கொழும்பு வாழ் மக்களுக்கு பொழுதுபோக்கு சாதனமாக இருந்த ஒரே ஒலி, ஒளி ஊடகம் நாடகம் மட்டுமே ஆகும். மேற்படி தற்காலிக மண்டபங்கள், பெவிலியன் திரையரங்குகள், பொது மண்டபங்கள், சரஸ்வதி மண்டபம் என அவற்றை பெயரிடப்பட்டிருந்ததுடன் அவற்றை தற்காலிக நாடக மன்றங்களாக பயன்படுத்தப்பட்டன. இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிலையான நாடக மன்றம் டவர்ஹோல் மன்றமாகும்.

அது மருதானையில் வசித்து வந்த திரு. ஜீ.டி.ஹெந்திரிக் செனவிரத்ன என்ற வியாபாரியால் நிர்மாணிக்கப்பட்டதாகும். குதிரைலாயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் 800 பார்வையாளர்கள் பார்க்கக் கூடிய வண்ணம் பெல்கனி மற்றும் நாடக நடிகர்களின் ஓய்வு அறை ஆகியவற்றுடன் கூடிய நாடக மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு அவர் தீர்மானித்தார். பிரதான மண்டபத்திற்கு அருகாமையில் லண்டனில் உள்ள மணிக்கூட்டு கம்பத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே டவர்ஹோல் நாடக மன்றம் என்ற பெயர் சூட்டப்பட்டது.

1911 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 06 ஆந் திகதி இலங்கையில் தேசிய வீரராக கௌரவிக்கப்பட்ட அநகாரிக தர்மபால அவர்களால் டவர்ஹோல் மன்றத்தை வெகு விமர்சியாக திறந்து வைக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் இலங்கையின் ஆளுநரான சர் ஹென்ரி மெல்கம் அவர்களின் தலைமைத்துவத்தில் "பண்டுகாபய" என்ற பாத்திரம் ஏற்று நடிக்கும் நாடகம் மேடையேற்றப்பட்டது. "பண்டுகாபய" என்ற நாடகத்தின் நாடக ஆசிரியர் மற்றும் இயக்குநராக திரு ஹெந்திரிக் செனவிரத்ன அவர்களின் புதல்வியை திருமணம் செய்திருந்த சார்ல்ஸ் டயஸ் பணியாற்றியிருந்தார். இவர் சட்டத்தரணியுமாவார். இந்த நாடகத்திற்கு தேவையான அனைத்து ஆடைகளையும் மும்பாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் டவர்ஹோல் மன்றம் சார்ல்ஸ் டயஸ் அவர்களால் எழுதி இயக்குகின்ற நாடகங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும் பின்னர் சட்டத்தரணி ஜோன் த சில்வா அவர்களின் நாடகங்களையும் அதில் காண்பிக்கப்பட்டது. இக் காலத்தை டவர்ஹோல் நாடக யுகம் என அழைக்கப்பட்டது. அக் காலத்தில் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் நூர்த்தி (பாகம் ஏற்று நடித்தல்) அல்லது புதிய நாடகங்கள் என்று அழைக்கப்பட்டது. அத்துடன் இலங்கை நாடக வரலாற்றில் இதற்கு விசேட இடம் கிடைத்தது.

ஹெந்திரிக் செனவிரத்ன அவர்கள் காலமடைந்த பின்னர் டவர்ஹோல் நாடக மன்றம் தொடர்பில் பல பிரச்சினைகள் தோன்றின. அதற்கு காரணம் அவரது பிள்ளைகளுக்கிடையில் ஏற்பட்ட சொத்து தொடர்பான சட்டப்பிரச்சினையாகும்.

1930 ஆம் ஆண்டு எப்.டி. ப்ரான்க் என்பவர் மாதமொன்றுக்கு ரூபா. 2000/= படி டவர்ஹோல் மன்டபத்தை வாடகைக்கு எடுத்தார். முதல் முறையாக "Shiren of Bagdad" என்ற திரைப்படம் அதில் திரையிடப்பட்டது.

அதன் பிறகு அதில் திரைப்படங்கள் திரையிடப்பட்டதால் டவர்ஹோல் மண்டபத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தமது தொழிலை இழக்க நேரிட்டது. அதன் காரணமாக அவர்கள் தொழில்சங்க தலைவரான ஏ.ஈ. குணசிங்க அவர்களிடம் முறைப்பாடு செய்தனர். அவர் ட்ரான்க் அவர்களுடன் கலைஞர்களின் நிலை பற்றி கலந்துரையாடினார். அதன் பலனாக ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் சிங்கள நாடகமொன்று டவர்ஹோல் நாடக மன்றத்தில் மேடையேற்ற வேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் 1947 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் சிலோன் தியடர்ஸ் கம்பனி, டவர்ஹேல் நாடக மன்றத்தை 125,000.00 இற்கு கொள்வனவு செய்தது. அதன் பின்னர் சிலோன் தியடர்ஸ் கம்பனியின் பணிப்பாளர் திரு.எம்.செல்லமுத்து அவர்களும் வரையறுக்கப்பட்ட சினிமாஸ் உரிமையாளரான திரு.கே.குணரத்னம் அவர்களும் இணைந்து டவர்ஹோல் நாடக மன்றத்தை திரையரங்காக பேணிச்சென்றதுடன் வரையறுக்கப்பட்ட டவர் டோகீஸ் என்ற கம்பனியை தாபித்தனர்.

அதன் பின்னர் கௌரவ சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மை அவர்கள் பிரதமமந்திரி பதவி வகித்த காலத்தில் டவர்ஹோல் நாடக மன்றம் மக்கள்மயமாக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தேவையான கடித ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. எவ்வாறெனிலும் இப் பிரேரணை காலமடைந்த கௌரவ ஆர்.பிரேமதாஸ அவர்கள் பிரதமமந்திரி பதவியில் நியமனம் பெற்ற 1978 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. அதாவது டவர்ஹோல் நாடக மன்றம் அரசாங்கத்திற்கு உடமைமாற்றம் செய்யப்பட்டது. உடமைமாற்றத்தின் பின்னர் கௌரவ ஆர் பிரேமதாஸ பிரதமமந்திரியின் தலைமைத்துவத்தில் நூர்த்தி மற்றும் டவர்ஹோல் நாடக மன்றத்தின் மறுசீரமைப்பு பணிகள் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு டவரஹோல் நாடக மன்றம் என்ற நிர்வாக அலகு தாபிக்கப்பட்டது.

சட்டத்தரணி ஜோன் த சில்வா அவர்கள் எழுதி தயாரித்த நாடகமான "சிறிசங்கபோ' தயாரிக்கும் பொறுப்பை புகழ்பெற்ற நடிகரும் நாடக நடிகருமான ஹென்றி ஜயசேன அவர்களிடம் டவர்ஹோல் நாடக மன்றத்தால் கையளிக்கப்பட்டது.

டவர்ஹோல் மன்றத்தை உடமைமாற்றம் செய்து புதுபித்துக்கொண்டதன் பின்னர் அங்கு மேடையேற்றப்பட்ட முதலாவது நாடகம் "சிறிசங்கபோ" ஆகும். ஆகையால் பல நூற்றாண்டுகளின் பின்னர் சிங்கள நாடகம் தோன்றிய இடத்திலயே "தன்னோ புதுன்கே" என்ற சதாகால பாடல் வழங்கப்பட்டது.

இவற்றுக்கிடையில் ஒக்டோபர் 10 ஆந் திகதி 01 ஆம் இலக்க டவர்ஹோல் நாடக மன்றச் சட்டம் நடைமுறைப்பட்டதுடன், பிரதம மந்திரியான ஆர். பிரேமதாஸ அவர்களின் தலைவர் பதவியின் கீழ் தாபிக்கப்பட்ட டவர்ஹோல் நாடக மன்றத்தின் முதலாவது பணிப்பாளர் நாயகமாக ஏ.ஜே. ரணசிங்க அவர்கள் நியமனம் பெற்றார். இவர் கௌரவ பிரதமமந்திரிக்கு ஒத்துழைப்பு வழங்கியவராவார்.

டவர்ஹோல் நாடக மன்றத்தால் மேடையேற்றப்பட்ட இரண்டாவது நூர்த்தி, சட்டத்தரணி ஜோன் த சில்வா அவர்களின் பிரசித்தி பெற்ற வரலாற்று நாடகமான "ஸ்ரீ விக்கிரம" ஆகும். மீண்டும் இந் நாடகத்தை தயாரிக்கும் கஷ்டமான பணியை முதல் தர நாடக எழுத்தாளரும் இயக்குநருமான திரு பிரேமரஞ்சித் திலகரத்ன அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் குறித்த நாடகம் மூலம் சிங்கள இராச்சியத்தின் துக்ககரமான நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. திரு. பிரேமரஞ்சித் திலகரத்ன அவர்கள் குறித்த நூர்தியை மேடை ஒளி, கூட்டு அசைவுகள், கூட்டு இசைத்தல் போன்ற நவீன நாடக உத்திகளை பயன்படுத்தி தயாரித்தார். ஸ்ரீ விக்கிரம நாடகத்தின்  முதல் காட்சி 1979 ஆம் ஆண்டு மார்ச் 02 ஆந் திகதி அன்று சனாதிபதி பதவி வகித்த காலம்சென்ற கௌரவ. ஜே.ஆர் ஜயவர்தன அவர்கள் உள்ளிட்ட அமைச்சரவை, தூதுவர்கள், அதீதிகள் ஆகியோரின் பங்களிப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அது சிங்களத்தின் இறுதி அரசரின் சரணடைதலில் 164 ஆவது ஆண்டை குறித்து நின்றது.

சமுத்திராதேவி மேடை நாடகம் டவர்ஹோல் நாடக மன்றத்தால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது நாடகமாகும். 1940 ஆம் நூற்றாண்டில் பிரசித்திப்பெற்ற எழுத்தாளரான திரு. டி.பி. செனவிரத்ன அவர்களால் எழுதப்பட்ட குறித்த நாடகத்தை தயாரிக்கும் பொறுப்பு ஜீ.எச். ஸ்டான்லி பெரேரா அவர்களிடம் கையளிக்கப்பட்டது. கோட்டே யுகத்தில் வாழ்ந்து வந்த வீதிய பண்டார என்ற வீர குமாரனுக்கும் சமுத்ராதேவி என்ற பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட துக்ககரமான காதல் காவியம் இந் நாடகத்தில் காட்டப்பட்டது. எவ்வாறெனிலும் சமுத்ராதேவி என்ற சொல்லின் பூரணமான பொருள் நூர்த்தி என்பது அல்ல. அதன் வடிவம் பெரும்பாலும் டீடர் நாடக வகைக்கு சமமானதாகும். "கோவே கெனுபராதய்" என்ற புகழ்பெற்ற தாளத்துடன் கூடிய பாடல் இந் நாடகத்தில் உள்ளது. இது போர்ச்சுகள் நாட்டுப் பாடலுடன் தொடர்புடையதாகும்.

நாட்டின் புகழ்பெற்ற சங்கீத மேதையான ஷெல்டன் பிரேமரத்ன அவர்கள் குறித்த மூன்று நாடகங்களுக்கும் இசையமைத்துள்ளார். நர்த்தனம் சித்திரசேன நர்த்தன பாடசாலையால் வழிநடாத்தப்பட்டதுடன் பிரசித்திப்பெற்ற ஓவியரான சோமபந்து வித்தியாபதி அவர்களால் உடைகள் மற்றும் மேடை அலங்காரங்கள் திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. கௌரவ பிரேமதாஸ அவர்கள் காலமடைந்த பின்னர் கௌரவ டி.பி.விஜேதுங்க அவர்களால் டவர்ஹோல் நாடக மன்றத்தின் தலைவர பதவி பொறுப்பேற்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமமந்திரி சந்திரிக்கா குமாரதுங்க அம்மை, கௌரவ சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மை, கௌரவ ரனில் விக்கிரமசிங்க அவர்கள், கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் ரத்தினசிறி விக்கிரமநாயக்க அவர்கள் அம் மன்றத்தில் தலைவர் பதவி வகித்தனர்.

இதற்கிடையில் பணிப்பாளர் நாயகப் பதவி திரு. ஏ.ஜே.ரணசிங்க, திரு. திசா வீரபான, திரு. கே.எம். அபேசிங்க, , திரு. பெனடிக் குமாரகே,திரு. டபிள்யூ. டி. டபிள்யூ. அபேவர்த்தன,திரு. ரஞ்சித் தர்மகீர்த்தி, திருமதி. இந்திகா பி. சந்திரதிலக்க, திரு. என்.டபிள்யூ. வெரளுபுட்டிய மற்றும் திரு.டக்ளஸ் சிறிவர்தன ஆகியோரால் வகிக்கப்பட்டது.

டிசம்பர் 2015 முதல்,திரு. லியோனல் பெர்னாண்டோ (சட்ட வழக்கறிஞர்),தற்போதைய பிரதமர் கெளரவ ரணில் விக்ரமசிங்க அவர்களால் அறங்காவலர் குழு தலைவராக பதவி வகிக்கப்படுகிறது.

தற்போது டவர்ஹோல் நாடக மன்றம் சர்வதேச நாடக நிறுவனத்தின் இலங்கை நிலையமாக கடமையாற்றுகின்றது.

LAST_UPDATED2  
டவர்ஹோல் மண்டபம்
எலிபின்ஸ்டன் மண்டபம்
ருக்மணிதேவி மண்டபம்
நாடக பாடசாலை
ஒலிகூடம்
பஸ்வண்டி சேவைகள்
டவர்ஹோல் வெளியீடுகள்
பாட்கண்டே

மேலே