Tower Hall Theatre Foundation

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

X மூடு
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு டவர்ஹோல் மண்டபம் மீள்பார்வை

மீள்பார்வை

டவர்ஹோல் நாடக மன்றம் எமது தேசிய உரிமையாகும். அநாகரிக தர்மபால, பியதாஸ சிறிசேன, கர்னல் ஒல்கட் ஆகிய எமது தேசிய முன்னேற்றத்தின் முன்னோடிகளாக கருதப்படும் முதல் தர தேசிய தலைவர்கள் தமது அபிவிருத்தி நடவடிக்கைகளின் பொருட்டு இம் மன்றத்தை பயன்படுத்தி உள்ளனர்.

குதிரைலாயமாக இருந்த குறித்த இடம் 1911 ஆம் ஆண்டில் அபிவிருத்தி செய்யப்பட்டு முதலாவது நிலையான நாடக மண்டபமாக மாற்றப்பட்டது. இலங்கையில் நாடக கலாசாரத்தை உருவாக்குவதற்கு முன்னோடியாக இருந்த டவர்ஹோல் நாடக மன்றம் தற்காலத்தில் நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு பாரிய உதவியாகவும் உள்ளது. அத்துடன் பெரும்பாலான மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. 1978 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க டவர்ஹோல் நாடக மன்றச் சட்டத்தின் கீழ் காலம்சென்ற ஆர்.பிரேமதாஸ சனாதிபதி அவர்கள் இந் நாடக மண்டபத்தை மன்றமாக மாற்றினார்.

அத்துடன் டவர்ஹேல் நாடக மன்றம் புதுப்பிக்கப்பட்டு நவீன மின் உபகரணங்கள் பொருத்தப்பட்டன.

கொழும்பு 10, மருதானை, பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள டவர்ஹோல் நாடக மன்றம் ஆரம்பம் தொடக்கம் இலங்கை வாழ் கலைஞர்களின் முன்னேற்றத்தில் பங்கு கொண்டுள்ளது.

அங்குள்ள மணிக்கூடு கம்பம் இந்த மன்றத்தின் புகழை பரப்புகின்றது. இந்த மன்றம் பல நூற்றாண்டுகளாக சமூக மற்றும் கலாசார பிரச்சினைகளை எதிர் நோக்கியது. ஐரோப்பிய கலாசாரத்தின் வருகையுடன் அது தீர்க்கமான மாற்றத்தை எதிர் நோக்கியது.

இக் கட்டிடம் 32 மில்லியன் ரூபா செலவில், அதன் வரலாற்று அம்சங்களை பாதுகாக்கும் வண்ணம் புதுப்பிக்கப்பட்டது. அது மீண்டும் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆந் திகதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த மறுசீரமைப்புடன் ஆசனங்களின் எண்ணிக்கை 856 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் முகாமைத்துவ சபை பார்வையாளர்களுக்கும் மக்களுக்கும் கீழே குறிப்பிட்டுள்ள வசதிகளை வழங்குகின்றது.

சிற்றுண்டிச்சாலை மூலம் உணவு குடிபான வகைகள் வழங்கப்படுகின்றது. நன்றாக பேணி வருகின்ற நூதனசாலையில் டவர்ஹோல் யுகத்தின் கலைஞர்களது ஆடைகள் மற்றும் பழைய நாடகங்களின் பிரதிகள் ஆகியவற்றை பார்வையிடுவதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

நாடகம் மற்றும் ஏனைய கலை நிகழ்ச்சிகளுக்கான ஆடைகள் வாடகைக்கு வழங்கப்படுகிறது. மேலும் புதிய மின் ஒளி மற்றும் ஒலி உபகரண முறைமையுடன் பெரிய மேடை வசதியும் இந்த மன்றம் மூலம் வழங்கப்படுகிறது. (ஜப்பான் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது)

தொடர்பு விபரங்கள்

முகவரி : டவர்ஹோல் நாடக மன்றம்,
பஞ்சிகாவத்தை வீதி,
மருதானை,
கொழும்பு 10,
இலங்கை
தொடர்பு நபர் : முகாமையாளர்
தொலைபேசி : +94 11 2431878
மின்னஞ்சல் : towersl[at]sltnet.lk
LAST_UPDATED2  
டவர்ஹோல் மண்டபம்
எலிபின்ஸ்டன் மண்டபம்
ருக்மணிதேவி மண்டபம்
நாடக பாடசாலை
ஒலிகூடம்
பஸ்வண்டி சேவைகள்
டவர்ஹோல் வெளியீடுகள்
பாட்கண்டே

மேலே