Tower Hall Theatre Foundation

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

X மூடு
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு ருக்மணிதேவி மண்டபம் மீள்பார்வை

மீள்பார்வை

காலமடைந்த ருக்மணிதேவியை நினைவு கூறு முகமாக 1980 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ருக்மணிதேவி கேந்திரம் ஆரம்பிக்கப்பட்டது. இது அவர் பிறந்த இடமான நீர்கொழும்பு மக்களது வேண்டுகோளை நிறைவேற்றவாகும். இந் நிலையம் கொழும்பு நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

இப் பிரதேசத்தில் கிறிஸ்தவ மக்கள் பல ஆண்டுகளாக பாஸ்கா நாடகங்களை விருத்திச்செய்து நடாத்தி வருகின்றனர். அதேபோன்று மேற்படி நிலையத்தில் விசேட பாஸ்கா நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் பாஸ்கா செயலமர்வுகள் ஆகியன ஒழுங்கமைக்கப்படுகின்றன. தற்கால இசை கலைஞர்களுக்கு ஊன்றுகோலாகவும் அளப்பரியாதும் பணியாற்றிய காலம்சென்ற பாடகியும் நடிகையுமான ருக்மணிதேவி அவர்களை நினைவு கூறுமுகமாக வருடாந்தம் நினைவுகூறும் வைபவங்கள் நடாத்தப்படுகின்றன. அங்குள்ள நூதனசாலையில் அவர் உபயோகித்த பல்வேறு ஆடைகள், ஆபரணங்கள் அவர் நடித்த திரைபடங்களில் தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

எமது ஞாபகத்தில் உள்ள அவர் பாடிய சில பாடல்களை கேட்டு இரசிப்பதற்காக மண்டபத்தில் நவீன உபகரணங்களுடன் கூடிய வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

சங்கீதம் மற்றும் நர்த்தனம் கற்ப்பிக்கும் ஆசிரியர்களால் நாளாந்தம் மற்றும் வார இறுதி வகுப்புகள் நடாத்தப்படுகின்றன. டவர்ஹோல் மன்றத்தின் அனுசரணையுடன் இந் நிலையத்தால் நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா. 250/= பெறுமதியான 50 புலமைப்பரிசீல்கள் வழங்கப்பட்டன.

ருக்மணிதேவி கேந்திரம் 500 இற்கும் அதிகமான ஆசன வசதியை கொண்டுள்ளது. நியாயமான கட்டணங்களுக்கமைய நாடகங்கள், பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கண்காட்சி உள்ளிட்ட வேறு வைபவங்களை நடாத்துவதற்கு ஒதுக்கிக்கொள்ளலாம்.

ஒதுக்கீடு / முன்பதிவுகள்

முகாமையாளர் அலுவலகம்
ருக்மணிதேவி நாடக கேந்திரம்
ருக்மணிதேவி மாவத்தை,
நீர்கொழும்பு.

தொலைபேசி: +94 031 2222342

LAST_UPDATED2  
டவர்ஹோல் மண்டபம்
எலிபின்ஸ்டன் மண்டபம்
ருக்மணிதேவி மண்டபம்
நாடக பாடசாலை
ஒலிகூடம்
பஸ்வண்டி சேவைகள்
டவர்ஹோல் வெளியீடுகள்
பாட்கண்டே

மேலே