Tower Hall Theatre Foundation

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

X மூடு
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு நாடக பாடசாலை மீள்பார்வை

மீள்பார்வை

ஆரம்பம்

1980 இல் நாடகம் மீதான பயிற்றிப்பட்டறை ஒன்று முதற் தடவையாக ரவர் மண்டப அரங்கியல் மன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து “Oedipus Rex” எனப் பெயரிடப்பட்ட நாடகமானது உருவாக்கப்பட்டது. நாடகம் மற்றும் அரங்கியல் மீதான ஆறு மாத வார இறுதி கற்கை நெறியானது 1985 ஆம் ஆண்டு முதற் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எவ்வாறாயினும் இக் கற்கைநெறியானது ஒழுங்ககாகவும், உரிய முறையாகவும் வளர்ச்சியடையவில்லை.

வளர்ச்சி

ஒரு முறைசார்ந்ததும் நிதானமானதுமான ஒருவருட முழுநேர நாடகம் பற்றிய டிப்ளோமா கல்வி நெறியானது அரசின் அனுசரணையுடன் நிலையான மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பாடவிதானத்தின் கீழ் 1997 ஆம் ஆண்டின் இறுதி அரையாண்டுப் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்காலப்பகுதியிலேயே பணிப்பாளர் நாயகம் பதவியினை ரஞ்சித் தர்மகீர்த்தி அவர்கள் கொண்டிருந்தார். நாடகம் மற்றும் அரங்கியலின் விஞ்ஞானரீதியானதும் நடைமுறை அபிவிருத்திக்குமான பார்வையைக் கொண்டிருக்கும் இப்பணியானது திருமதி இந்திக்க சந்திரதிலக்கே என்ற சட்டத்தரணியானவர் நிர்வாகத்தின் உச்சியில் இருந்த 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேலும் வளர்ச்சியடையச் செய்யப்பட்டது. ஒரு வருட காலத்திற்கு வரையறுக்கப்பட்டிருந்த இந்தக் கற்கைநெறியானது நாடகம் மற்றும் அரங்கியல் அறிவின் முழுமையான அறிவிற்காக இரண்டு வருடக் காலப்பகுதிக்கு கவனம் செலுத்தப்பட்டு, நாடகம் மற்றும் அரங்கியலில் இரண்டு வருட உயர் டிப்புளோமா கற்கைநெறியாக தரம் உயர்த்தப்பட்டதுடன், இரண்டு வருடங்களில் நாடகம் மற்றும் அரங்கியல் பற்றிய கோட்பாடு மற்றும் நடைமுறை அறிவு சாதிக்கப்பட்ட பிற்பாடு இக்கற்கைநெறியை உயர்ந்த அளவிலான பெறுமானமும் அங்கீகாரம் சேர்க்கும் வகையில் மாற்றியமைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டபொழுது, திறந்த பல்லைக்கழகத்து உயர் டிப்ளோமா வெற்றிகரமான பூர்த்தி அங்கீகாரத்திற்காக, உயர்கல்விக்கான நிறுவனத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றபொழுது அதற்கு வெற்றிகரமான பதில் கிடைத்தது.

நாடகம் அரங்கியலில் உயர் டிப்ளோமா மற்றும் நாடகம் மற்றும் அரங்கியல் கல்விமாணியில் பட்டக்கற்கைநெறி

நாடகம் அரங்கியலில் உயர் டிப்ளோமா மற்றும் நாடகம் மற்றும் அரங்கியல் கல்விமாணியில் பட்டக்கற்கைநெறி திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடமானது முதற் தடவையாக நாடகமும் அரங்கியலும் கல்விமானி கற்கைநெறிக்காக ரவர் மண்ட அரங்கியல் மன்றத்தின் கீழ் நடத்தப்பட்ட நாடகம் மற்றும் அரங்கியல் உயர் டிப்ளோமா இரண்டு வருட முழுநேரக் கற்கை நெறியினை சீரமைத்து உள்ளடக்கியதுடன், சிறப்புத் தேர்ச்சியுடன் நாடகம் மற்றும் அரங்கியல் உயர் டிப்ளோமா கற்கைநெறியை இரண்டு வருட முழுநேரமாக வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் கல்விப் பீடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள், இரண்டு வருட பகுதிநேர கற்கைநெறியை பூர்த்தி செய்த பிற்பாடு அவர்கள் நாடகம் மற்றும் அரங்கியலிலே கல்விமாணி பட்டத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இது இலங்கையின் ஒரேயொரு விசேடித்த கற்கைநெறியாக திகழும்.

மேற்படி பட்ட நிகழ்ச்சித்திட்டத்திற்காக கல்வியாண்டு 2007/2008 ஆண்டுக்காக 2007 ஜனவரி 12 ஆம் திகதி உள்ளீர்க்கப்படும் முதலாவது தொகுதியின் மாணவர்களின் உள்ளீர்ப்பானது வரலாற்று ரீதியாக ஒரு முக்கியமான இடம்பிடிப்பாக அமையும். ஏனெனில் தேசிய நாடக ஆண்டாக பெயரிடப்பட்ட 2007 ஆம் ஆண்டில் இந்த நிகழ்வு இடம்பெறுவதால் ஆகும். இந்த முக்கிய நிகழ்வானது இலங்கை ஜனநாயக சோலிசக் குடியரசின் பிரதம மந்திரியின் விசேட தலைமைத்துவத்தின் கீழ் நடைபெறுவது முக்கியமானதாக இருப்பதுடன், ரவர் மண்டப அரங்கியல் மன்றத்தின் தவிசாளர் கெளரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க, கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் மகிந்த யாப்ப அபயவர்தன ஆகியோரின் சிறந்த பிரசன்னத்துடனும், ரவர் மண்டப அரங்கியல் மன்றத்தின் பணிப்பாளர் நாயகமாகிய திரு. டக்ளஸ் சிறிவர்த்தன சட்டத்தரணியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் இடம்பெறும்.

ஆசாரங்களும் ஒழுங்குகளும்

நாடகமும் அரங்கியல் மீதான இரண்டுவருட முழுநேர உயர் டிப்புளோமா கற்கைநெறி மாணவர்களுக்கான எல்லா விரிவுரைகள் நடைமுறை விளக்கங்கள் மற்றும் பயிற்சிகளாவன வெளிப்புற விரிவுரையாளர் சபையினாலும், மற்றும் புலமையாளர்களாலும், பெயர்போன பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் அதிகாரபூர்வ புலமையாளர்கள் என்பவர்கள் ஊடாகவும் கற்பிக்கப்படும். இதற்கு மேலதிகமாக பாடவிதானமானது விரிவுரைகளை நடத்தவது, பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குகளை வைப்பது, பல்கலைக்கழகங்களால் கைக்கொள்ளப்படும் கல்வி முறைமையியல்களுக்கு பொருத்தமாக செயற்பாடுகளில் தொட்டுணர்ந்து கதைத்தல், உள்ளடக்கத்தின் இயற்கைத்தன்மை மற்றும் வடிவமைப்பு விதிகள் என்பன இந்த உயர் டிப்ளோமாவுக்காக பொருத்தமானதாக உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறாயினும் நாடகம் மற்றும் அரங்கியல் கல்வியானது நடைமுறையானதும், பிரயோக ரீதியானதுமான பாடம் ஆகவும், இருப்பதால் நடைமுறைப் பிரயோகத்தின் ஊடாகவே இது அதிகம் உற்பத்திதிறன் ஆக்கப்படுவதுடன், பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளைப் பொறுத்தமட்டில் இந்த விடயத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படும்.

நிர்வாகமும் முகாமைத்துவமும்

ரவர் மண்ட அரங்கியல் மன்றத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமைத்துவத்தின் கீழ், ஒரு முகாமைத்துவ சபை, நாடகம் மற்றும் அரங்கியல் கல்லூரியின் முகாமையாளர், அதேவேளையில் இரண்டு சிரேஷ்ட முகாமையாளர்கள் (நிகழ்ச்சித்திட்டம்) நிர்வாக விடயடங்களுக்கு பொறுப்பாக இருக்க, ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் விரிவுரையாளர்களால் நடாத்தப்படும்

நாடக தேசிய பாடசாலை

ரவர் மண்டப அரங்கியல் மன்றத்தின் கீழுள்ள நாடக அரங்கியல் கல்லூரியை ஒரு நாடக தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இப்பொழுது எடுக்கப்படுகின்றன. இலங்கையில் கோட்பாட்டு கலை துறையின் நீண்டகாலத் தேவையை உணர்ந்துகொண்டு அவ்வாறான ஒரு நிறுவன அமைப்பின் ஊடாக இலங்கையில் அத்தேவையானது பூர்த்தி செய்யப்படும்.

LAST_UPDATED2  
டவர்ஹோல் மண்டபம்
எலிபின்ஸ்டன் மண்டபம்
ருக்மணிதேவி மண்டபம்
நாடக பாடசாலை
ஒலிகூடம்
பஸ்வண்டி சேவைகள்
டவர்ஹோல் வெளியீடுகள்
பாட்கண்டே

மேலே